செய்திகள் உலகம்
கலிபோர்னியாவில் விரைவில் கடுமையான புயல், வெள்ளம் ஏற்படும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
கலிபோர்னியா:
தென் கலிபோர்னியா கடுமையான புயலை எதிர்கொள்ளத் தயாராகிறது.
லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) உள்ளிட்ட பல இடங்களில் திடீர் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தில் பெய்யும் மழை அடுத்த சில நாள்களில் கொட்டித்தீர்க்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா ஆளுநர் கெவின் நியூசம் (Gavin Newsom) பல்வேறு பகுதிகளில் அவசரநிலையை அறிவித்துள்ளார்.
அந்தப் பகுதிகளுக்கு அவசரகால உதவிகள் சென்று சேர்வதற்கு அது வழியமைக்கும்.
செவ்வாய்க்கிழமை இரவு கனத்த மழை பெய்ததில் மரங்கள் வீழ்ந்தன, சாலைகளில் பொருள்கள் சிதறிக் கிடந்தன.
சிறிய அளவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்றுக் காலை மழை தீவிரமடைந்தது. அதனால் பல்லாயிரம் பேர் தென் கலிபோர்னியாவில் மின்சாரச் சேவை இல்லாமல் இருந்தனர்.
ஆதாரம் : AFP
தொடர்புடைய செய்திகள்
December 25, 2025, 12:13 pm
முன்னாள் வழக்கறிஞர் M ரவியின் மர்ம மரணம்: அவருக்கு போதைப்பொருள் கொடுத்த நபர் கைது
December 23, 2025, 4:33 pm
கிறிஸ்துமஸை ஒட்டி சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
December 22, 2025, 8:32 am
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் கைது
December 20, 2025, 3:06 pm
வங்கதேசத்தில் வன்முறை: மாணவர் சங்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம்
December 20, 2025, 12:31 pm
தைப்பே சுரங்க ரயில் நிலையங்களில் தாக்குதல்: 4 பேர் பலி
December 20, 2025, 10:04 am
பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு எதிரொலி: கிரீன் கார்டு திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு
December 19, 2025, 9:54 pm
