நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நைஜீரியா நாட்டு பள்ளிவாசலில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி 

அபூஜா:

நைஜீரியா நாட்டில், பள்ளிவாசலில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்

நைஜீரியாவின் மைடுகிரி நகரத்தில் உள்ள மசூதியில், நேற்று (டிச. 24) இரவு தொழுகையின்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், 5 பேர் கொல்லப்பட்டதுடன், 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், தாக்குதல் நடைபெற்ற இடத்தில் காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து, அங்கு தற்கொலைப் படை தாக்குதலுக்கான தடயங்கள் மற்றும் வெடி குண்டுகளின் கருவிகள் கிடைத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, நைஜீரியாவின் வடக்கு மாகாணங்களில் போகோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாகத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் லட்சக்கணக்கான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே, நைஜீரியாவில் நடைபெறும் பெரும்பாலான தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு போகோ ஹராம் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.  

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset