
செய்திகள் உலகம்
சல்மான் ருஷ்டி தாக்குதலில் தொடர்பா?: ஈரான் மறுப்பு
துபாய்:
சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலில் ஈரானுக்கு தொடர்பிருப்பதாக வெளியான தகவலுக்கு அந் நாட்டு வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நஸீர் கனானி மறுப்பு தெரிவித்தார்.
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், வெளிநாடுகளில் இதுபோன்ற அதிருப்தியாளர்கள் மீது குறிவைத்து தாக்குதல்கள் நடத்துவதை ஈரான் நிறுத்திவிட்டது. ஆனால் மேற்கத்திய நாடுகள் இத்தகைய தாக்குதல்களுக்கு ஈரான் மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்தவர் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (75).
கடந்த 1988ஆம் ஆண்டு "தி சட்டானிக் வெர்சஸ்' என்ற ஆங்கில சரிச்சைக்குரிய நாவலை எழுதி வெளியிட்டார். அந்த நாவலுக்கு முழு முஸ்லிம் நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.
முஹம்மது நபி குறித்து கொச்சையாகவும் அவதூறாகவும் எழுதியதால் கடந்த 1989ஆம் ஆண்டு அவரை கொலை செய்ய உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு ஈரான் அரசியல் தலைவரும் மதகுருவுமான அயதுல்லா கொமேனி ஃபத்வா பிறப்பித்தார்.
இதையடுத்து ருஷ்டி பிரிட்டன் பிரிட்டனுக்கு தப்பி சென்றார். காவல் துறையின் பாதுகாப்பில் பல ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம், ஷட்டாக்குவா பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி மீது, இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாகத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ருஷ்டிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 12:36 pm
மனைவி வீட்டுக்குள் தற்கொலை: தெரியாமல் வாசலில் காத்திருந்த கணவர்
October 15, 2025, 9:58 pm
இந்தியாவில் 3 தரமற்ற இருமல் மருந்துகள்: WHO எச்சரிக்கை
October 15, 2025, 5:54 pm
உலகளாவிய தலைமைத்துவ விருது விழா: தாய்லாந்து அரச இளவரசியால் தொடங்கி வைக்கப்பட்டது
October 14, 2025, 12:53 pm
சிங்கப்பூர் மரீன் பரேட் இலவச இடைவழிப் பேருந்துச் சேவை முடிவுக்கு வருகிறது
October 13, 2025, 12:25 pm
காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் டிரம்ப்
October 12, 2025, 6:54 pm
சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீத வரி: டிரம்ப் மிரட்டல்
October 12, 2025, 3:27 pm
ஐரோப்பியப் பயணமா?: இனி அங்க அடையாள விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்
October 12, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்
October 11, 2025, 12:25 pm