நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை 

டெஹ்ரான்:

ஈரான் தற்காலிகமாக மூடிவைத்த ஆகாயவெளியை மீண்டும் திறந்திருக்கிறது.

ஐந்து மணி நேரம் ஆகாயவெளி மூடப்பட்டதால் பல விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதம் அடைந்தன.

இன்று காலை 6 மணியளவில் ஈரான் தனது ஆகாயவெளியை மூடியது.

ஈரானுக்குச் செல்லும், அங்கிருந்து புறப்படும் அனைத்துலக விமானங்களுக்கு மட்டுமே பறக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஈரானில் வரலாறு காணாத அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் நிலையில் ஆகாயவெளி மூடப்பட்டது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.

ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கூறியிருக்கிறார்.

அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும் என்று ஈரான் எச்சரித்தது.

அதை அடுத்து நேற்று (14 ஜனவரி) மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களிலிருந்து அதிகாரிகள் சிலரை அமெரிக்கா அவசரமாக மீட்டுக்கொண்டது.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset