நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் தனியாக வாழும் மூத்தோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் தனியாக வாழும் மூத்தோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.  

மூத்தோர் தனியாக வாழும் வீடுகளின் எண்ணிக்கை,.
2014 ஆம் ஆண்டு 42,100 ஆக இருந்தது. 
2024ஆம் ஆண்டு 87,200 ஆக அதிகரித்துள்ளது. 

தனியாக வாழாத மூத்தோருடன் ஒப்பிடுகையில் தனியாக வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியோர் மனச்சோர்வு அடையும் சாத்தியம் இருமடங்கு அதிகம் என்று மூப்படைதல் ஆய்வு, கல்விக்கான Duke NUS நிலையம் வெளியிட்ட ஆய்வு காட்டுகிறது. 

அத்தகையோரைத் துடிப்புமிக்க மூப்படையும் திட்டத்தில் சேர்த்துவிடுவதற்கு முயற்சி எடுக்கப்படுவதாகத் அமைச்சர் ஓங் நாடாளுமன்றத்தில் கூறினார். மூத்தோர் தலைமுறை அலுவலகம் அவர்களை அடையாளம் காண்பதாக அவர் மேலும் கூறினார். மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோருக்குச் சமூக மனநலக் குழுக்களின் ஆதரவும் வழங்கப்படுவதாக ஓங் குறிப்பிட்டார்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset