நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி

ஹாங்காங்:

ஹாங்காங்கில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் பொதுமக்களை நோக்கி கத்தியை காட்டி மிரட்டிய நபரை ஹாங்காங் போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 7 மணியளவில் நடைபெற்றது. இது மக்களிடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

சந்தேகநபர், முன்னதாக ஓர் உணவகத்திற்குள் நுழைந்து, அங்கிருந்து கத்தியை எடுத்துக்கொண்டு பொதுமக்களை நோக்கிச் சென்றதாக  பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் சரணடையுமாறு பலமுறை அறிவுறுத்திய போதிலும், அவர் அதை புறக்கணித்து ஒரு பெண்ணை பணயமாக வைத்திருந்தார்.
இதனால், பணயக்கைதியை காப்பாற்ற போலீசார் துப்பாக்கிச்சூட்டை  மேற்கொண்டனர். இதில் சந்தேகநபர் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவரது பையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset