நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கை (Pritam Singh) எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறார்.

பிரித்தம் அந்தப் பொறுப்புக்குத் தகுதியற்றவர் என்று நாடாளுமன்றம் நேற்று (14 ஜனவரி) தீர்மானம் நிறைவேற்றியது.

இன்று பிரதமர் வோங் அது குறித்து அறிக்கை வெளியிட்டார்.

சிங் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னார் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது; அதை மதிக்க வேண்டும் என்றார் திரு வோங்.

அதனடிப்படையில் பிரித்தம் சிங் எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பைத் தொடர்வது ஏற்கத்தக்கது அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

சிங்கை உடனடியாக எதிர்த்தரப்புத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக அவர் தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சியோடு நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் நிலைநாட்ட அந்த முடிவு முக்கியமானது என்றார் பிரதமர் வோங்.

வேறொரு நாடாளுமன்ற உறுப்பினரை அந்தப் பொறுப்புக்குப் பரிந்துரைக்கும்படி பாட்டாளிக் கட்சியிடம் கேட்டிருப்பதாகப் பிரதமர் வோங் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

பரிந்துரைக்கப்படுபவர் நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவின் விசாரணை முடிவில் சம்பந்தப்பட்டவராக இருக்கக்கூடாது என்று அவர் கூறினார்.

எதிர்த்தரப்புத் தலைவர் எனும் பொறுப்பிற்கு உயர்ந்த எதிர்பார்ப்பு உண்டு; அதை அவர் பூர்த்தி செய்ய வேண்டும் என்றார் பிரதமர் வோங்.

பிரதமரின் கடிதம் கிடைத்ததைப் பாட்டாளிக் கட்சி உறுதிசெய்தது.

கவனமாகப் பரிசீலித்துப் பதில் வழங்கப்படும் என்று கட்சி தனது Instagram பக்கத்தில் தெரிவித்தது.

ஆதாரம்: Mediacorp 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset