நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நானே வெனிசுலாவின் தற்காலிக அதிபர்: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் தன்னை வெனிசுலாவின் தற்காலிக அதிபர் மற்றும் அமெரிக்காவின் 45 மற்றும் 47-வது அதிபர் என குறிப்பிட்டு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துகிறார் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. வெனிசுலா மீது திடீர் தாக்குதல் நடத்தி அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவியை கைது செய்து அமெரிக்கா கொண்டு வந்தது. அவர்கள் அமெரிக்க நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகின்றனர்.

வெனிசுலாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் கச்சா எண்ணெய் எடுப்பதில் தீவிரம் காட்டி வரும் அதிபர் ட்ரம்ப் தனது சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு, அதற்கு கீழே வெனிசுலா தற்காலிக அதிபர் நான் தான். அமெரிக்காவின் 45 மற்றும் 47-வது அதிபர் நானே என குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset