செய்திகள் உலகம்
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
மாட்ரிட்:
ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின், சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் மகாராணியைக் காண இருக்கிறது.
தற்போதைய மன்னர் ஆறாம் பிலிப் மற்றும் ராணி லெட்டிசியாவின் மூத்த மகளான 20 வயது இளவரசி லியோனர், ஸ்பெயினின் அடுத்த வாரிசாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் 1800-களில் ஆட்சி செய்த இரண்டாம் இசபெல்லாவுக்குப் பிறகு லியோனர் ஸ்பெயினின் மகாராணியாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, ஸ்பெயினின் மகுடம் ‘ஹவுஸ் ஆஃப் போர்பன்' (House of Bourbon) வம்சத்தின் வசம் உள்ளது. பிரான்சிஸ்கோ பிராங்கோவின் சர்வாதிகார ஆட்சிக்குப் பிறகு, 1975-ல் முதலாம் ஜுவான் கார்லோஸ் தலைமையில் முடியாட்சி மீண்டும் நிலைநாட்டப்பட்டது.
அவர் 2014-ல் தனது மகன் ஆறாம் பிலிப்புக்காக தனது பதவியைத் துறந்தார். மன்னர் பிலிப் 2004-ல் பத்திரிகையாளரான லெட்டிசியாவைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு லியோனர் உட்பட இரு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 11:02 am
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு; அணு மையம் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
March 4, 2026, 10:14 am
முன்தாக்குதலா? முன்னெச்சரிக்கையா? ; அமெரிக்க தீர்மானத்தின் பின்னணி குறித்து கேள்விகள்
March 3, 2026, 11:32 pm
ஈரானின் சமீபத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்
March 3, 2026, 10:38 pm
இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலால் ஈரானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: செம்மஞ்சள் பிறை அமைப்பு
March 3, 2026, 10:19 pm
அமெரிக்கா, இஸ்ரேல் மீது நரகத்தின் வாயில்கள் நொடிக்கு நொடி விரிவடையும்
March 3, 2026, 11:55 am
14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்: அமெரிக்கா உத்தரவு
March 3, 2026, 11:43 am
