செய்திகள் உலகம்
ஆஸ்திரேலியாவில் அதீத வெப்பத்தால் காட்டுத்தீ பரவல் தொடர்கிறது: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சிட்னி:
ஆஸ்திரேலியா தீயணைப்பு வீரர்கள், அதிக வெப்ப நிலையினாலும், காற்றின் காரணமாகவும், காட்டுத்தீ அபாயம் அதிகரிக்கும் என பொது மக்களுக்கு எச்சரிக்கை வழங்கினர். கடந்த வாரங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ ஒன்று ஒருவரின் உயிரை பறித்து, 350-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை நாசம் செய்துள்ளது.
விக்டோரியாவில் காற்றும் வெப்பமும் 40° செல்சியஸ்ஸுக்கு மேல் சென்றதால் பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை 12 முக்கிய இடங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
நாட்டின் தீயணைப்பு ஆணையத்தின் தலைவர் ஜேசன் ஹெஃபர்னன், “இந்த உச்ச வெப்ப பருவம் இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளது. ஜனவரி இறுதிக்குள் மேலும் ஒரு வெப்ப அலை எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்று சுட்டிக்காட்டி உள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், காட்டுத்தீ அபாயங்கள் மீண்டும் எங்கும் எழலாம் என்பதால் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
தீயணைப்பு அவசர மேலாண்மை அதிகாரிகள், தற்போதைய சூழல் சிறிது மேம்பட்டிருந்தாலும், காற்றின் வேகம் காரணமாக தீ விரைவாக பரவக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 11:02 am
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு; அணு மையம் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
March 4, 2026, 10:14 am
முன்தாக்குதலா? முன்னெச்சரிக்கையா? ; அமெரிக்க தீர்மானத்தின் பின்னணி குறித்து கேள்விகள்
March 3, 2026, 11:32 pm
ஈரானின் சமீபத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்
March 3, 2026, 10:38 pm
இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலால் ஈரானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: செம்மஞ்சள் பிறை அமைப்பு
March 3, 2026, 10:19 pm
அமெரிக்கா, இஸ்ரேல் மீது நரகத்தின் வாயில்கள் நொடிக்கு நொடி விரிவடையும்
March 3, 2026, 11:55 am
14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்: அமெரிக்கா உத்தரவு
March 3, 2026, 11:43 am
