செய்திகள் உலகம்
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
பேங்காக்:
தாய்லாந்தில் ஓடும் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் வடகிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் சிகியோ மாவட்டத்தில் இன்று காலை இந்த விபத்து நேரிட்டுள்ளது.
உபோன் ராட்சதானி மாகாணத்துக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரயில் மீது கிரேண் விழுந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில், அதிவேக ரயில் திட்டப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதற்காக பயன்படுத்தப்பட்ட கிரேண் சரிந்து ஓடிக்கொண்டிருந்த ரயில் மீது விழுந்தது.
இதனால், ரயில் தடம் புறண்டு தீப்பற்றியது. தற்போது தீ அணைக்கப்பட்டுவிட்டது. எனினும், இடிபாடுகளில் மீட்கப்படாத உடல்கள் இருக்கின்றன. எனவே, உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன மீட்பு பணிக்குழுவினர் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 5:34 pm
அளவுக்கு மீறிய பயணிகள் ஏற்றம்: பேருந்து அனுமதி இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தம்
February 16, 2026, 6:41 pm
பாகிஸ்தானிலிருந்து விலகிய ஆப்கானிஸ்தான்: மருந்துத் துறைக்கு புதிய அறைகூவல்
February 15, 2026, 11:47 am
தென்கிழக்கு பிரான்சில் பனிச்சரிவில் சிக்கி மூன்று சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்
February 14, 2026, 7:05 pm
பிரான்சில் குழந்தையின் சடலங்களை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த தாய் கைது
February 14, 2026, 4:41 pm
2 சிசுக்களைக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொன்ற தாய்
February 14, 2026, 12:42 pm
ஷாங்காயில் மாபெரும் சாலை பிளப்பு: பீதியில் மக்கள்
February 14, 2026, 12:38 pm
பாரிஸில் பதற்றம்: கத்தி ஏந்திய நபர் போலிசார் சுட்டுக் கொலை
February 14, 2026, 10:23 am
