செய்திகள் உலகம்
மலேசிய எல்லை அருகே தாய்லாந்தில் 11 பெட்ரோல் நிலையங்களில் தாக்குதல்
பேங்காக்:
தாய்லாந்தின் தென் பகுதியிலிருக்கும் 11 பெட்ரோல் நிலையங்களில் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்துள்ளது.
நராட்டிவாட் (Narathiwat), பட்டானி (Pattani), யாலா (Yala) ஆகிய மாநிலங்களில் இன்று விடிகாலையில் தாக்குதல் நடந்ததாகத் தாய்லாந்து இராணுவப் பேச்சாளர் கூறினார்.
நள்ளிரவுக்குப் பிறகு 40 நிமிடங்களில் அனைத்துக் குண்டுகளும் வெடித்தன.
அந்த தாக்குதலில் நால்வர் காயமடைந்தனர்.
தாய்லாந்தின் தென் பகுதி மலேசியாவுக்கு மிகவும் அருகில் இருக்கிறது. அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
2004ஆம் ஆண்டிலிருந்து அங்கு தன்னாட்சியை விரும்பும் கிளர்ச்சிப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
யார் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை.
ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடந்ததாக நராட்டிவாட் மாநில ஆளுநர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அங்கு காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்ததை அவர் உறுதி செய்தார்.
பட்டானி மாநிலத்தில் தீயணைப்பாளரும் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் இருவரும் காயமடைந்தனர்.
தாக்குதல்கள் வரவிருக்கும் தேர்தலைப் பாதிக்கவே நடத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகின்றனர்.
எல்லையில் இருக்கும் மலேசிய இராணுவத்தினர் விழிப்புநிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
January 13, 2026, 2:54 pm
நானே வெனிசுலாவின் தற்காலிக அதிபர்: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
January 13, 2026, 2:43 pm
சிங்கப்பூரில் தனியாக வாழும் மூத்தோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது
January 12, 2026, 5:19 pm
ஆஸ்திரேலியாவில் அதீத வெப்பத்தால் காட்டுத்தீ பரவல் தொடர்கிறது: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
January 9, 2026, 6:34 pm
சிங்கப்பூரில் Nestle NAN பால் மாவுக்குத் தடை
January 9, 2026, 6:28 pm
இரண்டு நாள்களில் அமெரிக்கக் குடிநுழைவு அதிகாரிகள் நடத்திய 2 துப்பாக்கிச்சூடுகள்
January 8, 2026, 12:49 pm
பயணியா? விமானப் பணிப்பெண்ணா?: விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண்
January 8, 2026, 11:55 am
ஈரானில் பொருளாதார நெருக்கடி : 111 நகரங்களில் அரசு எதிர்ப்பு போராட்டம்
January 5, 2026, 3:35 pm
அணு ஆயுதம் தயார்நிலை: வடகொரியாவின் புதிய நகர்வு
January 4, 2026, 5:50 pm
