நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை வந்தது சீன உளவு கப்பல்: இந்தியா வழங்கியது இலவச ரோந்து விமானம்

கொழும்பு:

சீனாவின் உளவு கப்பல் இலங்கைக்கு வந்தடைவதற்குள், இலங்கைக்கு இந்தியா டார்னியர் ரோந்து விமானத்தை இலவசமாக வழங்கியது.

நவீன உளவு வசதிகளைக் கொண்ட "யுவான் வாங்5' கப்பலின் இலங்கை பயணத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

அதையடுத்து, அக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கோரியிருந்தது.

கப்பலின் வருகைக்கு அனுமதி பெறுவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் சீனத் தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து, சீனக் கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்தது. இந்தக் கப்பல் செவ்வாய்க்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை அங்கு அக்கப்பல் நிலைநிறுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், கொழும்பு காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள விமானப் படை தளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய கடற்படை துணைத் தளபதி எஸ்.என்.கோர்மடே, டோர்னியர் விமானத்தை அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்தார். கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் டோர்னியர் 228 ரக விமானத்தை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset