நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உம்ரா விசாவில் மக்காவில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களுக்கு வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசு தடை

இஸ்லாமாபாத்: ​

பிச்சை எடுப்பவர்​கள் வெளி​நாடு செல்​வதற்கு பாகிஸ்தான் அரசு தடை​வி​தித்​துள்​ளது. உம்ரா விசாவை தவறாகப் பயன்​படுத்​து​வது பரவலாக தெரியவந்துள்​ளது. 

சமீபத்​தில், சவுதி அரேபி​யா​வில் இந்த விசாவை யாசகம் கேட்க தவறாக பயன்​படுத்​தி​ய​தாக பல்​வேறு வழக்​கு​கள் பதி​வாகின.

இதையடுத்​து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், குடியேற்ற நடை​முறை​களை சீரமைக்​க​ ஒரு குழுவை அமைத்​தார்.

இந்நிலை​யில், யாசகர்​களும், முழு​மையற்ற ஆவணங்​களு​டன் பயணம் செய்​பவர்​களும் வெளி​நாடு செல்ல அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள் என்று பாகிஸ்​தானின் உள்​துறை அமைச்​சர் மொஹ்சின் நக்வி அறிவித்துள்ளார்.

சட்​ட​விரோத யாசகம், விசா விதி​மீறல்​கள்,  ஆவண மோசடி காரண​மாக வெளி​நாடு​களில் அவமானத்தை சந்​தித்​ததைத் தொடர்ந்து, முழு​மையற்ற பயண ஆவணங்​களைக் கொண்ட பாகிஸ்தான் நாட்​டினரை​யும், யாசகர்​களை​யும் வெளி​நாடு செல்​வதற்கு பாகிஸ்தான் அரசு தடை ​விதித்துள்ளது.

இந்த ஆண்​டில் பாகிஸ்தான் விமான நிலை​யங்​களில் சந்​தேகத்​திற்​குரிய ஆவணங்​களு​டன் வந்த 66,000 பயணி​கள் தடுத்து நிறுத்​தப்​பட்​டனர். 

பல்​வேறு விமான நிலை​யங்​களில் பாகிஸ்தான் பயணி​கள் விமானங்​களில் இருந்து இறக்​கி​விடப்​பட்​ட​தாக செய்​தி​கள் வெளி​யான நிலை​யில் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்ளது.

பாகிஸ்​தானுக்கு அவப்​பெயரை ஏற்​படுத்​துபவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று எச்​சரித்த நக்​வி, நாட்​டின் கண்​ணி​யத்தை காப்பது தனது முன்​னுரிமை என்று அமைச்​சர் மொஹ்சின் நக்வி கூறி​யுள்​ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset