செய்திகள் உலகம்
பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்கள் இனி அரசு ஊழியர்கள்: ஷார்ஜா அரசு அறிவிப்பு
ஷார்ஜா:
ஷார்ஜாவில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பணியாற்றும் இமாம்கள், முஅத்தின்கள் இனி அரசு ஊழியர்களாக கருதப்படுவார்கள் என்று அமீரகத்தின் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும், ஷார்ஜா ஆட்சியாளருமான
மாண்புமிகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்களின் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முடிவின் மூலம், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும்
பதவி உயர்வு, ஊதிய சலுகைகள், காப்பீடு திட்டங்கள், வேலை பாதுகாப்பு, பிற நலத்திட்டங்கள்
இமாம்கள், முஅத்தின்களுக்கும் வழங்கப்படும்.
மேலும், பணிச்சுமை காரணமாக விடுமுறை எடுக்க முடியாத சூழலில்,
அவர்களுக்கு மாற்று விடுப்பு வழங்கப்படும்.
அல்லது இஸ்லாமிய விவகாரத் துறையுடன் ஒருங்கிணைத்து விடுப்பிற்கான சமமான ரொக்க இழப்பீடும் வழங்கப்படும்.
இந்த அறிவிப்பு,
பள்ளிவாசல்களில் சேவை செய்து வரும் இமாம்கள், முஅத்தின்களின்
முக்கியத்துவத்தையும், அவர்களின் தியாக சேவையையும் அங்கீகரிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவு என்று உலமாக்கள் வரவேற்றுள்ளனர்.
ஆதாரம்: கல்ஃப் நியூஸ்
தொடர்புடைய செய்திகள்
December 27, 2025, 9:02 am
உம்ரா விசாவில் மக்காவில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களுக்கு வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசு தடை
December 26, 2025, 5:10 pm
நைஜீரியா நாட்டு பள்ளிவாசலில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி
December 25, 2025, 5:44 pm
கலிபோர்னியாவில் விரைவில் கடுமையான புயல், வெள்ளம் ஏற்படும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
December 25, 2025, 12:13 pm
முன்னாள் வழக்கறிஞர் M ரவியின் மர்ம மரணம்: அவருக்கு போதைப்பொருள் கொடுத்த நபர் கைது
December 23, 2025, 4:33 pm
கிறிஸ்துமஸை ஒட்டி சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
December 22, 2025, 8:32 am
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் கைது
December 20, 2025, 3:06 pm
