செய்திகள் உலகம்
புக்கெட் தீவுக்கு செல்ல கோத்தபாயவுக்கு அனுமதி இல்லை; ஹோட்டலை விட்டு வெளியேறக் கூடாது: போலீசார் கடுமையான உத்தரவு
பேங்காக்:
சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றுள்ள இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பேங்காக்கில் உள்ள நட்சத்திர தங்கு விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
எக் காரணத்தைக் கொண்டு தமது தங்கு விடுதி அறையை விட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து காவல்துறை அவருக்கு அறிவுறுத்தி இருப்பதாக பேங்காக் போஸ்ட் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இலங்கையில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், நாட்டை விட்டு வெளியேறினார் கோத்தபாய ராஜபக்சே. முதலில் மாலத்தீவுக்குச் சென்ற அவர், பின்னர் சிங்கப்பூருக்குச் சென்றார். இதையடுத்து தற்போது தாய்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அவர் அந்நாட்டில் 90 நாட்கள் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி அவர் நிரந்தரமாக அரசியல் அடைக்கலம் தருவதற்கு முன்வரும் நாட்டுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தாய்லாந்து தலைநகர் பேங்காக் வந்தடைந்த அவர், விமான நிலையத்தில் இருந்து நாற்பது நிமிடங்களில் வெளியேறிவிட்டார். அவரது மனைவியும் உடடன் இருந்தார்.
தாய்லாந்தில் தற்காலிகமாக தங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கோத்தபாய தாம் தங்கியுள்ள தங்கு விடுதியைவிட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
அவர் தாய்லாந்துக்கு வரும் தகவல் வெளியே கசிந்ததை அடுத்து, அவருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக அவர் நேரடியாக புக்கெட் தீவுக்கு செல்வதுதான் திட்டமாக இருந்தது என்றும், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு கடைசி நேரத்தில் இத் திட்டம் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு பிறகு அவர் புக்கெட் தீவுக்கு செல்ல அனுமதி கேட்டிருந்தார். அதற்கும் தாய்லாந்து அரசு அனுமதி தரவில்லை.
பேங்காக் நகரில் கோத்தபாய ராஜபக்சே தங்கியுள்ள விடுதியைச் சுற்றிலும் தாய்லாந்து காவல்துறை அதிகாரிகள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹோட்டலை விட்டு வெளியேறக் கூடாது என்று தாய்லாந்து போலீசார் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
November 21, 2025, 9:33 pm
துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானம் விபத்து: விமானி உயிரிழந்தார்
November 17, 2025, 10:58 pm
MalaysiaNow ஊடகத்தளத்திற்குத் தடை விதித்தது சிங்கப்பூர்
November 16, 2025, 9:11 pm
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சியில் பெரும் விரிசல்: டெய்லர் கிரீனுடன் மோதல் முற்றுகிறது
November 16, 2025, 9:49 am
ஜப்பானுக்குச் செல்லாதீர்கள்: சீனர்களை எச்சரிக்கும் சீனா
November 15, 2025, 4:12 pm
மாட்டிறைச்சி, காபிக்கு வரிவிலக்கு: டிரம்ப் அறிவிப்பு
November 15, 2025, 4:01 pm
MalaysiaNow நாளேட்டுக்குச் சிங்கப்பூர் POFMA சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவு
November 14, 2025, 3:31 pm
தைவான் குறித்த கருத்துகளை ஜப்பான் திரும்பப் பெற வேண்டும்: சீனா எச்சரிக்கை
November 14, 2025, 2:03 pm
