நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இறக்குமதி பொருட்களின் வரியை 15 விழுக்காட்டிற்கு மேலும் உயர்த்திய டிரம்ப்

வாஷிங்டன்: 

அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் டிரம்ப் உலகளாவிய இறக்குமதி பொருட்களுக்கு பதினைந்து விழுக்காடு வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, அமெரிக்கவின் உயர் நீதிமன்றம் முன்பு அறிவிக்கப்பட்ட பல வரிகள் சட்டவிரோதமானதாகும் என தீர்ப்பளித்ததற்குப் பின்னர் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற ஒப்புதல் இன்றி தற்காலிக வரிகளை விதிக்க அனுமதிக்கும் 1974 வர்த்தகச் சட்டத்தின் ஒரு பிரிவை பயன்படுத்தியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, அவர் தனது சமூக ஊடகத்தில் தெரிவித்தார். இதன் மூலம், வரி கொள்கைகளில் தனது உறுதியை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் பத்து விழுக்காடு வரி விதிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், இப்போது அது பதினைந்து விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. 

அவசர பொருளாதார சட்டத்தை பயன்படுத்தி கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட வரிகள் ஜனாதிபதியின் அதிகார வரம்பை மீறியவை என நீதிமன்றம் தீர்மானித்தது. இதை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த புதிய வரி உயர்வு, முன்னதாக குறைந்த வரி ஒப்பந்தம் கொண்டிருந்த நாடுகளுக்கு புதிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

இந்த முடிவு உலக வர்த்தகத்தில் மேலும் நிலைதடுமாற்றத்தை உருவாக்கும் என உலக தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset