நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் முழுமையாக தயார்: ஈரான் மூத்த தலைவர் அலி காமெனெய்

தெஹ்ரான்: 

அமெரிக்காவின் தாக்குதல் தவிர்க்க முடியாததாக மாறக்கூடும் என்ற கணிப்பின் பின்னணியில், ஈரான் முழுமையான பாதுகாப்புத் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த தகவலை தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி, ஈரானின் மூத்த தலைவர் அலி காமெனெய் திடீர் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு சிறப்பு உத்தரவுகளை வழங்கியுள்ளார். 

முன்னதாக இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதல்களில் இருந்து பாடம் கற்ற ஈரான், முக்கிய சாலைகள் மீது கட்டுப்பாடுகளை விதித்து, எதிரிகளை கண்டறியும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும், இராணுவப் பயிற்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மேற்குப் எல்லைப் பகுதிகளில் இஸ்ரேலை குறிவைக்கும் வகையிலும், பாரசீக வளைகுடா கரையோரங்களில் அமெரிக்க இராணுவத் தளங்களை எதிர்கொள்ளும் நோக்கிலும் ஏவுகணைத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே நேரத்தில், காமெனெய் உயிரிழந்தால் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான திட்டங்களையும் தயாரிக்க உத்தரவிட்டுள்ளார். 

மேலும், எதிர்கால தலைமை மாற்றம் அல்லது போர் சூழ்நிலைக்காக, தனது அதிகாரங்களில் சிலவற்றை நம்பகமான கூட்டாளிகளிடம் ஒப்படைத்து, மாற்றுத் தலைவர்களாக நான்கு பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset