செய்திகள் உலகம்
ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் பலி
காபூல்:
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் இன்று அதிகாலை வான்வழி தாக்குதலை நடத்தியது. ஆயுதக் குழுக்களின் முகாம்கள், மறைவிடங்களை குறிவைத்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை கூறுகையில், இந்த தாக்குதலில் நங்கர்ஹார், பக்திகா பகுதிகளில் உள்ள சமயப் பள்ளிகளும், குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டதாகவும், பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்து காயமடைந்ததாகவும் தெரிவித்தது.
நங்கர்ஹாரில் குறைந்தது பதினேழு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன; பக்திகாவில் இழப்பு எண்ணிக்கை உறுதியாகவில்லை.
இதற்கிடையில், பாகிஸ்தான் தகவல் துறை, எல்லைப் பகுதிகளில் செயல்படும் ஆயுத அமைப்புகளின் ஏழு முகாம்கள் மீது துல்லியத் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததாக கூறியது. அந்த அமைப்புகள் பாகிஸ்தானில் நடைபெற்ற பல தாக்குதல்களுக்கு பொறுப்பானவை எனவும், அவை ஆப்கானிஸ்தானிலிருந்து திட்டமிடப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியது.
இந்த குற்றச்சாட்டுகளை ஆப்கானிஸ்தான் மறுத்ததுடன், வான்வழி தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறியது என கண்டனம் தெரிவித்தது. மேலும், பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 22, 2026, 4:55 pm
கிரீன்லாந்துக்கு மருத்துவக் கப்பல் அனுப்பும் திட்டம்: டிரம்ப் அறிவிப்பு
February 22, 2026, 11:38 am
இயற்கை சீற்றத்தினால் அவதிப்படும் சீனா மக்கள்: சுற்றுலா இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன
February 22, 2026, 10:24 am
இறக்குமதி பொருட்களின் வரியை 15 விழுக்காட்டிற்கு மேலும் உயர்த்திய டிரம்ப்
February 21, 2026, 7:36 pm
பள்ளியில் பொதி வெடித்து மூவர் காயம்
February 21, 2026, 3:00 pm
உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு டிரம்ப் அதிரடி: உலகம் முழுவதும் 10% சுங்கவரி
February 20, 2026, 5:35 pm
ரமலான் முதல் நாளில் ஏற்பட்ட துயரம்: பாகிஸ்தானில் எரிவாயு வெடிப்பில் 16 பேர் பலி
February 20, 2026, 5:08 pm
ரஷ்யாவில் ஹெலிகாப்டர் மர்மமாக காணாமல் போன சம்பவம்: மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
February 20, 2026, 4:39 pm
அர்ஜென்டினாவில் 90% துறைகளில் வேலைநிறுத்தம்: தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்
February 20, 2026, 12:12 pm
