நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டிரம்ப் விதித்த சுங்க வரியை அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது

வாஷிங்டன்: 

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சுங்க வரி கொள்கைவ் அமெரிக்க உயர் நீதிமன்றம் மூலம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாடுகள் மீது மேலும் கடுமையான சுங்க வரிகள் விதிக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.

சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், பல ஆண்டுகளாக அமெரிக்காவை ஏமாற்றிய நாடுகள், சமீபத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதை விட மிக அதிகமான சுங்க வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்தார்.

அவசர பொருளாதார அதிகாரத்தை பயன்படுத்தி உலகளாவிய சுங்க வரிகளை விதித்ததில் தன் அதிகார வரம்பை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு, டிரம்பின் பொருளாதார திட்டங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அமெரிக்க சுங்கம், எல்லைப் பாதுகாப்பு துறை, நீதிமன்றம் ரத்து செய்த சுங்க வரி வசூலை செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 
அதே நேரத்தில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர், வாஷிங்டனுடன் செய்யப்பட்ட சுங்க வரி ஒப்பந்தங்களை வர்த்தக கூட்டாளிகள் கடைபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, டிரம்ப் வேறு சட்டத்தை பயன்படுத்தி, இறக்குமதிகளுக்கு பொதுவான 10 சதவீத சுங்க வரியை விதிக்கும் உத்தரவை கையெழுத்திட்டார். இந்த வரியை 15 சதவீதமாக உயர்த்தும் எண்ணமும் இருப்பதாக அவர் கூறினார்.

-கிரித்திகா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset