நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பனியை உடைத்து ஏரியில் மூழ்கிய சுற்றுலா பேருந்து: சீன சுற்றுலாப் பயணிகள் பலி

ரஷ்யா: 

சைபீரியாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற பைக்கால் ஏரியில், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய பேருந்து, பனியை உடைத்து ஏரிக்குள் மூழ்கியதில், ஏழு சீன சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவைச் சேர்ந்த ஓர் ஓட்டுநரும் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் ஒருவர் உயிருடன் தப்பியதாக இர்குட்ஸ்க் மண்டல ஆளுநர் இகோர் கோப்ஸேவ் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்து ஏற்பட்ட இடத்தின் ஆழம் சுமார் 18 மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனியில் ஏற்பட்ட மூன்று மீட்டர் அகலமான பிளவின் வழியாக பேருந்து ஏரிக்குள் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பைக்கால் ஏரியில் பயணம் செய்வது தற்போது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அது மிகுந்த அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், சுற்றுலாப் பயணிகள் அதிகாரப்பூர்வ சுற்றுலா நிறுவனங்களையே பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset