நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

துபையில் மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரியின் நூல் வெளியீடு கண்டது: ப்ளாக் துலிப் யஹ்யா வெளியிட்டார்

துபாய்:

மனிதநேய  ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் 2016 முதல் 2021 வரை சட்டசபையில் ஆற்றிய உரைகள் அடங்கிய தொகுப்பான 'சட்டசபையில் சமூக நீதி குரல் ' என்ற நூல் இன்று துபாயில் வெளியிடப்பட்டது.

மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்ற இந்நிகழ்வில்,  ப்ளாக் துலிப் வணிக குழுமத் தலைவர்  முஹம்மது யஹ்யா  அவர்கள் வெளியிட, ஆரிஃபா குழுமங்களின் தலைவர் சுல்தானுல் ஆரிபின் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

மஜக வின் வெளிநாட்டு சார்பு அமைப்பான மனித நேய கலாச்சாரப் பேரவை (MKP)  ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், பெரும் திரளான தமிழ்நாட்டவர்கள் பங்கேற்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset