நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இயற்கை சீற்றத்தினால் அவதிப்படும் சீனா மக்கள்: சுற்றுலா இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன

பெய்ஜிங்: 

சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் சனிக்கிழமை மாலை முதல் பலத்த காற்றும், மணற்புயலும் தாக்கியதால், காற்று மாசு கடுமையாக உயர்ந்துள்ளது என்று சின்ஹுவா செய்தி வெளியிட்டது.

நகர வானிலைத் துறை தெரிவிப்பின்படி, காற்றில் உள்ள துகள்மாசு அளவு அதிகரித்து, பிற்பகல் இரண்டு மணியளவில் ஒரு கன மீட்டருக்கு நூற்று எழுபத்தைந்து மைக்ரோகிராம் என்ற அளவை எட்டியது. இரவு நேரத்தில் இந்த அளவு ஐந்நூறு மைக்ரோகிராமை மீறும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வெளிப்புற சுற்றுலா இடங்கள் சில தற்காலிகமாக மூடப்பட்டன. சீனப் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற இருந்த சில நிகழ்ச்சிகளும் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிறு காலை வரை ஒத்திவைக்கப்பட்டன. 

சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஒன்பது நாள் விடுமுறையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில், திங்கட்கிழமைக்குள் காற்றின் வேகம் குறையும் என வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

இந்த நிலை காரணமாக, லியாவ்னிங், ஷாண்டோங் பகுதிகளுக்கு இடையிலான பயணிகள் கடற்படகு சேவை சனிக்கிழமை நண்பகல் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை படிப்படியாக சேவை மீண்டும் தொடங்கப்படும் என கடல்சார் அதிகாரிகள் தெரிவித்தனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset