
செய்திகள் உலகம்
இந்தியாவின் எதிர்ப்பை புறந்தள்ளியது இலங்கை: சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி
கொழும்பு:
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. அந்தக் கப்பல் வரும் 16ஆம் தேதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவுள்ளது.
சுமார் ஒரு வாரத்துக்கு அக்கப்பல் துறைமுகத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவீன வேவுபார்க்கும் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட சீனாவின் "யுவான் வாங்5' உளவுக் கப்பலானது இலங்கைக்கு வரவிருந்த நிலையில், அதற்கு இந்திய தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அக் கப்பலின் வருகை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்தியாவின் தொடர் அழுத்தத்தை அடுத்து, கப்பலின் வருகையைக் காலவரையின்றி ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசு வலியுறுத்தியது.
இந்த விவகாரத்தில் இந்தியா தேவையின்றி இலங்கைக்கு அழுத்தம் தருவதாக சீனா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், "யுவான் வாங் 5' உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆகஸ்ட் 16ஆம் தேதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் அக் கப்பல் 22ஆம் தேதி வரை அத் துறைமுகத்தில் கப்பல் நிலைநிறுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5ஆம் தேதியே சீனாவில் இருந்து புறப்பட்ட கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 600 கடல்மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் விவரங்கள், கடற்படைத் தளங்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றைறக்கூட "யுவான் வாங்5' கப்பலால் சேகரிக்க முடியும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm
சிங்கப்பூரின் தமிழ் நாளிதழான தமிழ் முரசு 90ஆம் ஆண்டை நிறைவு செய்தது
July 6, 2025, 7:25 pm
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
July 6, 2025, 12:57 pm
வரிக் குறைப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
July 6, 2025, 11:19 am