நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேலும் பல தடுப்பூசிகள் மலேசியாவுக்கு தேவை: அம்னோவின் காலித் நோர்டின் வலியுறுத்து

கோலாலம்பூர்:

மலேசியாவுக்கு மேலும் பல தடுப்பூசிகள் தேவைப்படுவதாக அம்னோ துணைத்தலைவர் மொகமட் காலித் நோர்டின்  Mohamed Khaled Nordin தெரிவித்துள்ளார்.

ஃபைசர், அஸ்ட்ராஸெனகா, சினோவாக் ஆகிய மூன்று தடுப்பூசிகளுக்கு மட்டுமே அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை மலேசிய அரசு அளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, ஸ்புட்னிக்-வி, மாடர்னா, ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கும் நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் மலேசியாவின் தடுப்பூசி திட்டம் மேலும் வேகம் பெறும் என்றார் மொகமட் காலித் நோர்டின்.

கடந்த திங்கள்கிழமையன்று ஸ்புட்னிக், சீனாவின் Cansino, மற்றும் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகள் தற்போது மலேசிய மருந்து ஒழுங்குமுறை முகமையின் பரிசீலனையில், ஆய்வில் இருப்பதாக தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கைரி ஜமாலுதீன் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் மேற்குறிப்பிட்ட இந்தத் தடுப்பூசிகள் பல்வேறு அனைத்துலக ஒழுங்குமுறை முகமைகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு அதிஉயர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் காலித் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டி உள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மது தடுப்பூசிகள் குறித்து தெரிவித்த கருத்துடன் காலித்தின் கருத்தும் கிட்டத்தட்ட ஒத்துப் போகிறது.

வளர்ந்த நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ள தடுப்பூசிகளை மலேசியாவும் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கப்பட வேண்டும் என மஹாதீர் கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset