
செய்திகள் மலேசியா
MCO 3.0 : முதல் நாளன்று 781 பேருக்கு அபராதம் விதிப்பு
கோலாலம்பூர்:
முழு அளவிலான MCO அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முதல் நாளன்று பல்வேறு விதிமீறல்களுக்காக 11 பேர் கைதாகி உள்ளனர்.
781 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடீன் தெரிவித்தார்.
போலிசார் 13 ஆயிரம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து SOPகளும் கடைபிடிக்கப்படுகின்றனவா என்பது குறித்து கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
"அதிகமானவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் இன்னும் பலர் நிர்ணயிக்கப்பட்ட SOPகளைப் பின்பற்றுவதில்லை என்பது தெரியவருகிறது. தொற்றுச் சங்கிலியை உடைக்கவேண்டுமெனில் நாம் கட்டுப்பாடுகளைப் பின்பற்றவேண்டியது அவசியம்," என்று உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடீன் வலியுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே நாடு தழுவிய அளவில் மேலும் பல சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்வார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர், SOPகளை மீறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் பல போலிசார் களமிறக்கப்படுவார்கள் என்றார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள காலத்தில் மக்கள் அனைவரும் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் SOPகளையும் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm