நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்பிஎம், எஸ்டிபிஎம் முடித்து கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பு

ஜெலுபு:

2017 முதல் 2021 வரை எஸ்பிஎம் எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் குறைந்த தேர்வு பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பை ஜெலுபு நாடாளுமன்றத்தில் அதன் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டரசு பிரதேச துணையமைச்சருமான டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் அவர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14.08.2022 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.00 முதல் 4.00  மணிவரை ஜெலுபு சிம்பாங் பெர்த்தாங் நாடாளுமன்ற அம்னோ மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஜெலுபு நாடாளுமன்றத்தில் எஸ்டிபிஎம், எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்களும், குறைந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஏற்பட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியற்கு கல்லூரியில் இணைவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் வழிகாட்டுதல்களையும் மேற்கொள்ளவிருக்கின்றனர் என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்த கருத்தரங்கத்தில் கலந்துக்கொள்ளவுள்ள மாணவர்கள் தங்களின் தந்தை, தாய் அவர்களின் அடையாள அட்டை நகல்கள், எஸ்பிஎம், எஸ்டிபிஎம், தேர்ச்சி முடிவுகள், பெற்றோரின் மாத வருமான நகல்கள், மாணவர்களின் முக்கிய தேவையான சான்றுகளை நேரில் கொண்டு வருமாறு ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேல் விபரங்களுக்கு பிரேம் 010-391 1697 என்ற எண்ணுடன் தொடர்புக் கொள்ளலாம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset