நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் டாயிமின் அறிவிக்கப்படாத 2 பில்லியன் ரிங்கிட் சொத்துக்களை பறிமுதல் செய்யும் திட்டத்தை எம்ஏசிசி பரிசீலித்து வருகிறது: டான்ஶ்ரீ அஸாம் பாக்கி

புத்ராஜெயா:

முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடினின் 2 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள அறிவிக்கப்படாத சொத்துக்களை பறிமுதல் செய்யும் திட்டத்தை எம்ஏசிசி பரிசீலித்து வருகிறது.

எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி இதனை தெரிவித்தார்.

டாய்ம், அவரது குடும்பத்தினர், பிரதிநிதிகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பாக வெளிப்புற நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட புதிய தகவல்களின் அடிப்படையில் எட்டு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளது.

எனவே சமீபத்திய தகவல்கள், 2023 ஆம் ஆண்டு நடத்திய விசாரணையின் போது மறைந்த துன் டாய்ம், அவரது குடும்பத்தினர், அவரது கூட்டாளிகளின் சொத்துக்களின் உரிமையை எம்ஏசிசிக்கு அறிவிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

கேள்விக்குரிய சொத்துக்கள் உண்மையாக இருந்தால் அது முறையாக அறிவிக்கப்பட வேண்டும்.

அவை அறிவிக்கப்படவில்லை என்றால் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையச் சட்டம் 200 கீழ் குற்றமாகும்.

ஆக  துன் டாய்ம் இப்போது இல்லாவிட்டாலும், அரசாங்கத்தின் உரிமைகள் பறிக்கப்பட வேண்டும் என்று எம்ஏசிசி முன்மொழியும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset