நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் சட்டத்துறை தலைவருக்கு எதிராக நஜிப் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார்

கோலாலம்பூர்:

முன்னாள் சட்டத்துறை தலைவர் அஹ்மத் டெரிருதீன் முஹம்மத் சாலேவுக்கு எதிராக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி கோரி விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் நஜிப் தனது சிறைத்தண்டனையின் மீதமுள்ள ஆறு ஆண்டுகளை வீட்டுக் காவலில் கழிக்க வேண்டும் என்ற கூடுதல் உத்தரவு இருப்பதை டெர்ரிருடின் வெளிப்படுத்தத் தவறியதைத் தொடர்ந்து அவர் இம்முடிவை எடுத்துள்ளார்.

நஜிப்பின் வழக்கறிஞர் முஹம்மத் ஷாபி அப்துல்லா ஒரு அறிக்கையில்,

முன்னாள் பிரதமரிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்ற பிறகு கடந்த புதன்கிழமை விண்ணப்பத்தை தாக்கல் செய்ததாகக் கூறினார்.

ஜனவரி 29, 2024 தேதியிட்ட கூடுதல் உத்தரவு ஆணையின் நகல், அதே மாதத்தில் பகாங் சுல்தான் அலுவலகத்திலிருந்து வந்த அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில், அந்த நேரத்தில் டெர்ரிருடினுக்கு சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷாவின் ஆணையை நேரடியாகத் தெரியும் என்று ஷாபி கூறினார்.

கூடுதல் உத்தரவு, வீட்டுக் காவல் உத்தரவு இருப்பதை ஆவணங்கள் உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல் அந்த உத்தரவை சட்டத்துறை தலைவர் என்ற முறையில் டெர்ரிருடினுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டதையும் அவர் காட்டினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset