
செய்திகள் மலேசியா
கெஅடிலான் கட்சியின் சீர்திருத்தங்கள் தொடர அனுபவமிக்க, உறுதியான தலைவர்கள் தேவை: குணராஜ்
ஜொகூர்பாரு:
கெஅடிலான் கட்சியின் சீர்திருத்தங்கள் தொடர அனுபவமிக்க, உறுதியான தலைவர்கள் தேவைப்படுகின்றனர்.
கெஅடிலான் தேர்தலின் மத்திய செயற்குழு வேட்பாளர் குணராஜ் இதனை கூறினார்.
கெஅடிலான் கட்சியின் தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் மத்திய செயற்குழுவிற்கு நான் போட்டியிடுகிறேன். எனது வேட்பாளர் எண் 13 ஆகும்.
நான் மூன்று முறை கெஅடிலான் கோத்தா ராஜா தொகுதி தலைவராகவும் இரண்டு முறை செந்தோசா சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறேன்.
குறிப்பாக அடிமட்ட மக்களுடன் நெருக்கமாக இருந்து, மக்களின் நாடித்துடிப்பைப் புரிந்துகொண்டு, களத்தில் கட்சியை வலுப்படுத்த அயராது உழைத்து வருகிறேன்.
நீதியின் வலிமை வெறும் சொல்லாட்சியில் அல்ல, போராட்டத்தின் மதிப்பில் உள்ளது என்று நான் நம்புகிறேன்.
மேலும் கெஅடிலான் கட்சியில் சீர்திருத்தங்கள் தொடர வேண்டும்.
ஆனால் இந்த சீர்ந்திருத்தங்கள் வெற்றி பெற அனுபவமிக்க, உறுதியான தலைவர்கள் கட்சிக்கு தேவை.
போராட்டத்தின் வேர்களை அறிந்தவர்கள், மக்களுக்காக போராடுபவர்களாகவும் இருக்க வேண்டும்.
நான் இனிமையான வாக்குறுதிகளுடன் வரவில்லை, ஆனால் பணியின் பதிவு மற்றும் தோழமை உணர்வோடு வந்தேன்.
நீதியின் எதிர்காலத்திற்கு இலட்சியவாதம், நிறுவன வலிமை ஆகியவற்றின் கலவை தேவைப்படுகிறது.
அடிமட்ட மக்களின் குரலுக்கும் தேசியத் தலைமைக்கும் இடையே ஒரு பாலமாக இருக்க நான் தயாராக இருக்கிறேன் என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 22, 2025, 1:17 pm
ஜாஹிட்டிற்கு எதிரான துன் மகாதீரின் அவமதிப்பு வழக்கு விசாரணை: ஜூலை 21 க்கு ஒத்திவைப்பு
May 22, 2025, 12:08 pm
சமிக்ஞை மேம்படுத்தல் பணிகளால் Komuter, ETS ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும்
May 22, 2025, 10:55 am
மலாய் பேரணிக்கான அனுமதி விவகாரம்; இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளது: போலிஸ்
May 22, 2025, 10:54 am