
செய்திகள் மலேசியா
ஜாஹிட்டிற்கு எதிரான துன் மகாதீரின் அவமதிப்பு வழக்கு விசாரணை: ஜூலை 21 க்கு ஒத்திவைப்பு
கோலாலம்பூர்:
துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹிட்டிற்கு எதிரான முன்னாள் பிரதமர் மகாதீரின் அவமதிப்பு வழக்கு விழாரணை ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி துன் மகாதீர் தொடர்பான குட்டி பிரச்சினையின் ஜாஹித் வழக்கில் சாட்சியமளித்தார்.
அதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய அவர், துன் மகாதீரின் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் பல நகல்களைக் காட்டினார்.
டாக்டர் மகாதீரைப் பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் மியோர் நோர் ஹைதர் சுஹைமி, நேற்று பெறப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஜாஹிட்டின் பதில் பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்ய தனது தரப்பினருக்கு நேரம் தேவை என்று தெரிவித்ததை அடுத்து, நீதிபதி கான் டெச்சியோங் ஒத்திவைப்பை அனுமதித்தார்.
எங்கள் தரப்பு எனது கட்சிக்காரரிடமிருந்து பிரமாணப் பத்திரம் தொடர்பான வழிமுறைகளைப் பெற வேண்டும்.
மேலும் எனது கட்சிக்காரர் தற்போது லங்காவியில் நடைபெறும் லிமா கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளார்.
எனவே, இன்றைய நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் பிரதிவாதியின் வழக்கறிஞர் இந்த ஒத்திவைப்பை எதிர்க்கவில்லை என்று நான் நம்புகிறேன் என்று வழக்கறிஞர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 22, 2025, 1:17 pm
கெஅடிலான் கட்சியின் சீர்திருத்தங்கள் தொடர அனுபவமிக்க, உறுதியான தலைவர்கள் தேவை: குணராஜ்
May 22, 2025, 12:08 pm
சமிக்ஞை மேம்படுத்தல் பணிகளால் Komuter, ETS ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும்
May 22, 2025, 10:55 am
மலாய் பேரணிக்கான அனுமதி விவகாரம்; இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளது: போலிஸ்
May 22, 2025, 10:54 am