நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எந்தவொரு வைரல் பிரச்சினைக்கும் தேசிய முன்னணி மூன்று மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்: ஜாஹித்

கோலாலம்பூர்:

சமூக ஊடகங்களில் வைரலாகும் எந்தவொரு பிரச்சினைக்கும் தேசிய முன்னணி மூன்று மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்.

அதன் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

கட்சியின் எதிர்மறையான கருத்தை பொதுமக்கள் நம்புவதைத் தடுக்க விரைவாக அகற்றப்பட வேண்டும். இது கட்சிக்கு தீங்கு விளைவிக்கும்.

நாம் 2018 இல் தோற்றோம், 2022 இல் கூட அதே நிலை தான்.  ஏனென்றால் என் கருத்துப்படி நம் மீது வீசப்பட்ட  குற்றச்சாட்டுகள் மிகவும் கனமானது.

மேலும் அந்த குற்றச்சாட்டுகளை நாம் குறுகிய காலத்தில் நிவர்த்தி செய்யவில்லை.

சமூக ஊடகங்களை முக்கிய அடிப்படையாகப் பயன்படுத்த வேண்டும். மேலும் எந்தவொரு பிரச்சினைக்கும், குறிப்பாக எதிர்மறையான கருத்துக்கள், மூன்று மணி நேரத்திற்குள் பதிலளிக்கப்பட வேண்டும்.

முன்பு மூன்று நாட்களுக்குப் பிறகு பதிலளித்தோம். சில சமயங்களில் 30 நாட்களுக்குப் பிறகு.

சில நேரங்களில் பதில் சரியாக இல்லாவிட்டாலும் இது மக்களின் மனதில் பதிந்துவிட்டது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset