
செய்திகள் மலேசியா
உலு லங்காட் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான திடல் தடப் போட்டியில் காஜாங் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
அம்பாங்:
உலு லங்காட் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான திடல் தடப் போட்டியில் காஜாங் தமிழ்ப்பள்ளி முதல் நிலையில் வாகை சூடியது.
உலு லங்காட் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான திடல் தடப் போட்டி அண்மையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியினை அதிகாரப்பூர்வமாக மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா தொடக்கி வைத்தார்.
சிலாங்கூர் மாநில மஇகா தலைமை செயலாளர் எம். சசிதரன் பரிசுகளை எடுத்து வழங்கினார்.
இப்போட்டியில் ஏழு தங்கப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த முதல் நிலையில் காஜாங் தமிழ்ப்பள்ளி வெற்றி பெற்றது.
அம்பாங் தமிழ்ப்பள்ளி ஏழு தங்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்தையும், ஆறு தங்கங்களுடன் மூன்றாம் இடத்தை செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி வாகை சூடின.
இப்போட்டியில் 8 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 283 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை, உலு லங்காட் மாவட்ட கல்வி இலாகா, உலு லங்காட் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், சிலாங்கூர் மாநில திடல் தட சங்கம், உலு லங்காட் மஇகா தொகுதி ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது.
10, 11, 12 வயது மாணவர்கள் (ஆண் மற்றும் பெண்) என ஆறு பிரிவுகளில் போட்டிகள் நடைப்பெற்றன.
ரேஷ்மா த/பெ ரமேஷ், அஷ்விக்கா நாயர் தாமோதர் - காஜாங் தமிழ்ப்பள்ளி , ஜனிஷா த/பெ ரெங்கநாதன், ஷரந்த் த/பெ முனீஸ்வரன் - அம்பாங் தமிழ்ப்பள்ளி, கோகுல கண்ணன் த/பெ கமலஹாசன், முகமது சமீர் பின் சலீம் - செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகிய மாணவர்கள் சிறந்த போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 22, 2025, 1:17 pm
கெஅடிலான் கட்சியின் சீர்திருத்தங்கள் தொடர அனுபவமிக்க, உறுதியான தலைவர்கள் தேவை: குணராஜ்
May 22, 2025, 1:17 pm
ஜாஹிட்டிற்கு எதிரான துன் மகாதீரின் அவமதிப்பு வழக்கு விசாரணை: ஜூலை 21 க்கு ஒத்திவைப்பு
May 22, 2025, 12:08 pm
சமிக்ஞை மேம்படுத்தல் பணிகளால் Komuter, ETS ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும்
May 22, 2025, 10:55 am
மலாய் பேரணிக்கான அனுமதி விவகாரம்; இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளது: போலிஸ்
May 22, 2025, 10:54 am