நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணையச் சூதாட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட 150க்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டன: சாவ் கோன் இயோ 

ஜார்ஜ் டவுன்:

பினாங்கில் இணையச் சூதாட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட 150-க்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சாவ் கோன் இயோ தெரிவித்தார். 

2023-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரை முடக்கப்பட்ட கணக்குகளிலிருந்து 32 மில்லியன் ரிங்கிட் பணத்தையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

சட்டவிரோத சூதாட்டம் மற்றும் மோசடி கும்பல்களை முறியடிக்க காவல்துறை தொடர்ந்து Ops Dadu சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருவதையும் சாவ் கோன் இயோ உறுதிப்படுத்தினார். 

2023 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் 1,390 குற்றச்சாட்டுகளுடன் 2,337 இணையச் சூதாட்ட வழக்குகளில் 2,681 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

2024 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் 1,084 குற்றச்சாட்டுகளுடன் 1,510 வழக்குகளில் 1,810 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை, 485 வழக்குகள் தொடர்பாக மொத்தம் 542 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்  255 குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் டிஜிட்டல் மோசடிகள் உள்ளிட்ட சைபர் குற்றங்களுக்கு எதிராக வலுவான தண்டனைகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தை திருத்தியுள்ளதாக சௌ கூறினார்.

மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் ஆயிரக்கணக்கான இணையச் சூதாட்ட தளங்களை முடக்கியுள்ளதாக என்று அவர் கூறினார்.

2020 மற்றும் 2022 க்கு இடையில் 6,381 தளங்கள் முடக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset