நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பச்சோக்கில் ஆசிட் வீச்சில் ஈடுபட்ட மற்றொரு சந்தேக நபர் கைது: போலீஸ் தகவல் 

கோத்தா பாரு: 

கடந்த சனிக்கிழமை கிளாந்தான் மாநில பச்சோக்கில் உடம்புபிடி மையம் நடத்துரின் முகத்தில் ஆசிட் வீசியதாக நம்பப்படும் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். 

இதனை பச்சோக் காவல்துறை தலைவர் முஹம்மத் இஸ்மாயில் ஜமாலுடின் உறுதிப்படுத்தினார். 

கோல கெராயில் உள்ள ரப்பல் தொழிற்சாலையில் நேற்று மாலை 4 மணியளவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். 

குற்றவியல் சட்டத்தின் செக்‌ஷன் 326இன் கீழ் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

அடுத்த கட்ட விசாரணைக்காக சந்தேக நபருக்கு எதிராக தடுப்பு காவலை நீட்டிக்க காவல் துறை விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் சொன்னார். 

முன்னதாக ஆசிட் வீச்சில் ஈடுபட்டதாக நம்பப்படும் பெண் சந்தேக நபர் ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார் என்று ஊடகங்ங்கள் இதற்கு முன் செய்திகளை வெளியிட்டிருந்தன.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset