
செய்திகள் மலேசியா
கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் 25 அணிகள் பங்கேற்பு: டத்தோ வீரமணி
கோலாலம்பூர்:
கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் 25 அணிகள் பங்கேற்கவுள்ளன.
கூட்டரசுப் பிரதேச இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ வீரமணி இதனை கூறினார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் மீபா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
அதே வேளையில் ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி வரும் மே 24ஆம் தேதி காலை 8 மணி முதல் சுங்கைப்பூலோ அரேனா மெல்வூட்டில் நடைபெறவுள்ளது.
கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்றத்தின் ஒத்துழைப்புடம் நடைபெறும் இப்போட்டியில் 25 குழுக்கள் பங்கேற்கவுள்ளன.
இதில் 16 ஆண்கள் அணியும் 9 பெண்கள் அணியும் அடங்கும்.
கிட்டத்தட்ட 400 மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என 200 பேர் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இப்போட்டியில் வெற்றி பெறும் குழுக்களுக்கு பரிவுகளும் வழங்கப்படவுள்ளது
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் இப்போட்டியை தொடக்கி வைக்கவுள்ளார்.
அதே வேளையில் மீபா தலைவர் அன்பானந்தன் போட்டியை முடித்து வைத்து போட்டியாளர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கவுள்ளார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 22, 2025, 1:17 pm
கெஅடிலான் கட்சியின் சீர்திருத்தங்கள் தொடர அனுபவமிக்க, உறுதியான தலைவர்கள் தேவை: குணராஜ்
May 22, 2025, 1:17 pm
ஜாஹிட்டிற்கு எதிரான துன் மகாதீரின் அவமதிப்பு வழக்கு விசாரணை: ஜூலை 21 க்கு ஒத்திவைப்பு
May 22, 2025, 12:08 pm
சமிக்ஞை மேம்படுத்தல் பணிகளால் Komuter, ETS ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும்
May 22, 2025, 10:55 am
மலாய் பேரணிக்கான அனுமதி விவகாரம்; இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளது: போலிஸ்
May 22, 2025, 10:54 am