நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதால் பூங் மொக்தார், ஜிஸி  2.8 மில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கில் தற்காப்பு வாதம் புரிய வேண்டும்

புத்ராஜெயா:

மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதால் பூங் மொக்தார், ஜிஸி 2.8 மில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கில் தற்காப்பு வாதம் புரிய வேண்டும்.

டத்தோஸ்ரீ பூங் மொக்தார் அவரது மனைவி டத்தின்ஸ்ரீ ஜிஸி இசெட் அப்துல் சமத் ஆகியோர் மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளில் தங்கள் தற்காப்பு வாதங்களை முன்வைக்க உத்தரவிட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததன.

டத்தோ முகமட் சே ருசிமா கசாலி தலைமையிலான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு, முந்தைய முடிவை மறுபரிசீலனை செய்ய அனுமதி கோரிய தம்பதியினரின் விண்ணப்பத்தை இன்று ஒருமனதாக நிராகரித்தது.

இந்த நீதிபதி குழுவில் டத்தோ அஜிசுல் அஸ்மி அட்னான் மற்றும் டத்தோ அகமது கமால் எம்டி ஷாஹித் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

முந்தைய முடிவை மறுபரிசீலனை செய்ய நியாயப்படுத்தக்கூடிய விதிவிலக்கான சூழ்நிலைகள் அல்லது கடுமையான அநீதி இருப்பதைக் காட்டும் வரம்பு நிபந்தனைகளை மேல்முறையீட்டாளர்களாக தம்பதியினர் பூர்த்தி செய்யத் தவறிவிட்டனர்.

எனவே, மறுபரிசீலனை செய்ய அனுமதி கோரிய மேல்முறையீட்டாளரின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset