
செய்திகள் மலேசியா
வான்வெளி ஊடுருவல் தொடர்பாக சீன தூதரை வரவழைத்து விஸ்மா புத்ரா விசாரிக்கும்: அமைச்சர் ஹிஷாமுதீன்
புத்ராஜெயா:
சீன விமானங்கள் பறந்த விவகாரத்தில் விஸ்மா புத்ரா, மலேசியாவிற்கான சீன தூதரை அழைத்து விசாரிக்கும்; மலேசியா சம்மனும் அளிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் அறிவித்தார்.
மலேசிய வான்வெளியில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்த சீன விமானங்கள் பலத்த சந்தேகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
தங்களுக்கு சரியான தகவல்கள் கிடைக்கப்பற்றுள்ளன. இதனை மலேசிய வெளிவிவகாரத்துறை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறிய அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் இதுகுறித்து சீன தூதரை அழைத்து விசாரிப்பதோடு பெய்ஜிங்கிற்கும் அறிவிக்கப்படும்.
தூதரக மட்டத்தில் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm