நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன்று ஐ.சி.யூ வில் உள்ளவர்கள் 872 பேர்; இறப்பு 71: நூர் ஹிஷாம் அப்துல்லாஹ்

புத்ராஜெயா: 

"தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) சிகிச்சை பெறும் கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று 872 ஐ எட்டியுள்ளது. இன்றைய எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம்" என்று சுகாதாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) நிலவரப்படி, கோவிட் -19 நோயாளிகள்  419 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

''முந்தைய புள்ளிவிவரப்படி மே 7ஆம் நாள்தான் அதிகமான கோவிட் -19 நோயாளிகள் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அன்று 506 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தனர்."

இன்றைய இறப்பு கணக்கை கூறிய டாக்டர் நூர் ஹிஷாம் கடந்த 24 மணி நேரத்தில் 71 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறினார். இதனுடன் நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை 2,867 ஆகும்.

சிலாங்கூரில் 28 பேரும், ஜோகூர், சரவாக் (ஏழு), கோலாலம்பூர் (ஆறு), கிளந்தான் (ஐந்து), மலாக்கா (நான்கு), கெடா (மூன்று) நெகிரி செம்பிலன், திரெங்கானுவில் இரண்டு பேரும் இறந்து இருக்கிறார்கள். சபா, பஹாங், லாபான் மற்றும் பினாங்கு மாநிலங்களில் தலா ஒருவர் இறந்துள்ளார்கள்.

இன்றைய 7,105 தொற்றுகளில் இரண்டு பேர் மட்டும்  வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள அனைவரும் மலேசியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சிலாங்கூர் அதிக எண்ணிக்கையிலான தொற்றுத் திரள்களை  (157) பதிவுசெய்திருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில், கோலாலம்பூர் 78, சரவாக் 64 கிளந்தான் 66, ஜொகூர் 88.

நாடு முழுவதும் இதுவரை 496,121 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset