நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு ஊழியர்கள் அனைவரும் 50 விழுக்காடு ஊதியம் பேரிடர் நிதிக்கு தருகிறார்கள்; கோவிட் -19 தொற்று போராட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்புக்கு தொடரும்: தலைமைச் செயலாளர் அறிவிப்பு

கோலாலம்பூர்: 

கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பகுதி அனுப்பப்படும் என்று அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முஹம்மத் ஜுகி அலி அறிவித்துள்ளார்.

நிலையான பொழுதுபோக்கு கொடுப்பனவு (Fixed Entertainment Allowance (IDK) இன் விலக்குகள் மிக உயர்ந்த பிரிவு ஏ-யில் உள்ளவர்களுக்கு 50 சதவீதமாகவும், பிரிவு பி-யில் உள்ளவர்களுக்கு 20 சதவீதமாகவும், பிரிவு சி-யில் இருந்து 10 சதவீதமாகவும், 56-பிரிவின் கீழுள்ள அரசு ஊழியர்கள் முதல் 5 சதவீதமாகவும் இருக்கும். 

41 முதல் 29 ஆம் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு, RM10 அவர்களின் பொது சேவை நிலையான கொடுப்பனவு (ITKA) இலிருந்து கழிக்கப்படும்.

முன்கள பணியாளர்களுக்கு - ஃப்ரண்ட்லைனர்கள் என வகைப்படுத்தப்பட்டவர்களுக்கு இந்தக் ஊதியக் கழிவுகள் பொருந்தாது.

''பிடித்தம் செய்யப்படும் தொகைகள் அனைத்தும் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பப்படும்.

"அரசின் சிவில் ஊழியர்கள் அல்லது தரம் 1 முதல் 28 ஆம் பிரிவு வரையிலானவர்களைத் தவிர்த்து 800,000 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் பங்களிப்புகள் RM30 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது" என்று டான்ஸ்ரீ  முஹம்மத் ஜூக்கி ஓர்  அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த ஊழியப் பிடித்தங்கள் மூன்று மாத காலத்திற்கு நீடிக்கும்.

பிரதம மந்திரி டான்ஸ்ரீ முஹைதீன் யாசின் நேற்று, அனைத்து மத்திய அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் மூன்று மாதங்களுக்கு அவர்களின் சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த பங்களிப்புகள் சிவில் சேவையின் ஒற்றுமையின் ஒரு சைகை என்று அவர் கூறினார்.

"வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்திற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசு ஊழியர்கள் நிலையான முதுகெலும்பாக இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்; அரசின் முயற்சிகளுக்கு நாங்களும் தோள் கொடுப்பதில் பெருமை கொள்கிறோம்," என்று ஜுகி கூறினார்.

“இந்த தியாகம் ஒவ்வொரு அரசு ஊழியரின் வாழ்க்கையிலும், அவர்களது குடும்பத்தினரிடமும் நன்மைக்கு ஒரு காரணமாக அமையட்டும்.

"நாங்கள் எங்கள் முயற்சிகளில் தொடர்வோம், நாட்டின் ஒற்றுமைக்கும் சுபிட்சத்திற்கும் தேசத்தின் நலனுக்கும் எங்களால் முடிந்த சிறந்த சேவையை வழங்குவோம், அதே போல் இந்த சவாலான நேரத்தை சமாளிப்பதில் அரசுடன் நின்று வெற்றிக்கு உதவுவோம்," என்று டான்ஸ்ரீ  முஹம்மத் ஜுகி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset