நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வருமான வரி நிலுவைத் தொகையை செலுத்த ஒப்புக்கொண்டார் நிஸார் நஜீப்

கோலாலம்பூர்:

தாம் செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகையை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளார் முன்னாள் பிரதமர் நஜீப்பின் மகனான நிஸார் நஜீப். அவர் சுமார் 13.16 மில்லியன் ரிங்கிட் தொகையை செலத்த வேண்டி உள்ளது.

நிஸார் நஜீப் செலுத்த வேண்டிய மீதமுள்ள வரித்தொகை மீதான  மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் துணைப்பதிவாளர் மரியம் ஹசனா ஓத்மான் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.  

இதையடுத்து கடந்த மே 27ஆம் தேதி நிஷார் செலுத்த வேண்டிய வரி நிலுவை தொகை குறித்து இணக்கம் காணப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

"ஒப்புதல் உத்தரவு கடந்த மே 27ம் தேதியன்று வருமான வரி சிறப்பு ஆணையர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை  அமல்படுத்தப்படுவதை அடுத்து ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது," என்று நிஸாரின் வழக்கறிஞர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset