
செய்திகள் மலேசியா
அனைத்து அமைச்சர்களும், துணை அமைச்சர்களும் தங்கள் மூன்று மாத ஊதியத்தை கோவிட் -19 தொற்று நடவடிக்கைகளுக்கு பேரிடர் கால நிதியாக வழங்குவார்கள்: பிரதமர் அறிவிப்பு
கோலாலம்பூர்:
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக அனைத்து அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் ஜூன் முதல் மூன்று மாதங்களுக்கு தங்களது சம்பளத்தை வழங்குவார்கள் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹைதீன் யாசின் இன்று மாலை அறிவித்தார்.
அதற்கு பதிலாக, அவர்களின் சம்பளம் நாளை தொடங்கும் "ஊரடங்கின் - நடமாட்டுக் கட்டுப்பாட்டு" விளைவுகளைத் தணிக்கும் நோக்கில் RM40 பில்லியன் பெமர்காசா பிளஸ் உதவி முயற்சிக்கு மாற்றப்படும் என்றார்.
"2021 ஜூன் முதல் மூன்று மாதங்களுக்கு தங்கள் சம்பளத்தை விட்டுக்கொடுப்பதின் மூலம் அனைத்து அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் கொரோனாவை ஒழிப்பதில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தங்களது ஆதரவை வழங்கி உள்ளார்கள் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்" என்று பிரதமர் முஹைதீன் யாசின் தொலைக்காட்சியில் இன்று வழங்கிய சிறப்பு உரையில் கூறினார்.
"அமைச்சர்களின் ஊதியம் முழுவதும் கோவிட் -19 தொற்று தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இந்த நிதி "பேரிடர்கால அறக்கட்டளை" கணக்கில் செலுத்தப்படும்," என்று பிரதமர் கூறினார்.
தற்போது அரசாங்கத்தின் நிதியாற்றல் பெரிய அளவில் இல்லை என்றாலும்கூட குடிமக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படக்கூடாது என அரசு விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். எனவே, அரசாங்கம் தொடர்ந்து முடிந்தவரை மக்களுக்கு உதவி செய்யும் என்றார் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதீன் யாசின்.
கடந்த ஆண்டும்கூட கொரோனா நிதிக்காக அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் தங்களது 2 மாத ஊதியத்தை வழங்கி இருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm