
செய்திகள் மலேசியா
பயண அனுமதி தொடர்பில் நேர்மையுடன் செயல்பட வேண்டும்: அரசாங்கம் அறிவுறுத்து
கோலாலம்பூர்:
பயணங்கள் மேற்கொள்ள காவல்துறையின் அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்கக்கூடியவர்கள் நேர்மையான காரணங்களை முன்வைக்க வேண்டும் என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
பொய்யான காரணங்களுடன் கூடிய விண்ணப்பங்களால் உண்மையாகவே பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தில் இருப்பவர்களும் பாதிக்கப்படுவர் என்றார் அவர்.
"பல விண்ணப்பங்களை சந்தேகத்தின் பேரால் காவல்துறை நிராகரிக்க வேண்டியுள்ளது. அதேசமயம் கடும் நோய்வாய்ப்பட்டுள்ள தாயாரைச் சந்திக்கச் செல்லும் மகன் போன்ற உண்மையான காரணங்களும் உள்ளன.
"எனவே, நேர்மையான முறையில் மக்கள் காவல்துறை அனுமதிக்கு விண்ணப்பிப்பார்கள் என நம்புகிறேன்," என டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் மேலும் தெரிவித்தார்.
அண்மைய சில தினங்களாக மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே பயணம் மேற்கொள்பவர்கள் முன்வைக்கும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm