நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியர்கள் தடுப்பூசியைத் தேர்வு செய்ய அனுமதி இல்லை: முடிவை மாற்றிக்கொண்டது அரசாங்கம்


புத்ராஜெயா:

மலேசியர்கள் தங்களுக்கான கொரோனா தடுப்பூசியைத் தேர்வு செய்யலாம் என்று வெளியிட்ட அறிவிப்பை அரசு திரும்பப் பெற்றுள்ளது.

இவ்வாறு தேர்வு செய்ய வழங்கப்படும் அனுமதியானது தடுப்பூசி நடவடிக்கைகளில் தாமதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் அனைத்து மலேசியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி போடும் திட்டத்தை அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகிறது.

இந் நிலையில் மலேசியர்கள் தங்களுக்கு விருப்பமான தடுப்பூசியைத் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

பல்வேறு கொரோனா தடுப்பூசிகள் சந்தைக்கு வந்திருப்பதால் மக்கள் தங்களுக்குத் திருப்தியும் அதிக நம்பிக்கையும் அளிக்கக்கூடிய தடுப்பூசிகளைத் தேர்வு செய்வது அவர்களுக்கு மனநிறைவைத் தரும் என்பதால் அரசு இப்படியொரு வாய்ப்பை வழங்குவதாக கருதப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
இந் நிலையில் முந்தைய அறிவிப்பை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.

தடுப்பூசியைத் தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படும் என அரசாங்கம் கருதுவதாக அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில்  தடுப்பூசி திட்டத்தின்கீழ்  அதிகமானோருக்கு தடுப்பூசி போடுவதில்தான் அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். தடுப்பூசி போடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டால்தான் அது தொடர்பாக அரசு வகுத்துள்ள  இலக்கை அடையமுடியும் என்றும் அவர் கோடி காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset