
செய்திகள் மலேசியா
கிளந்தானில் பாதிக்கப்பட்டவர்களில் 18 விழுக்காட்டினர் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
கோத்தபாரு:
கிளந்தான் மாவட்டத்தில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 18 விழுக்காட்டினர் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.
இதை அம் மாநிலத்தின் சுகாதார, வீட்டு வசதிக் குழுவின் தலைவர் டாக்டர் ஹிசானி ஹுசின் உறுதி செய்துள்ளார்.
கடந்த சில தினங்களாக அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாள்தோறும் புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 3 இலக்கங்களில் பதிவாகி வருகிறது.
SOPகளை முறையாகப் பின்பற்றாததே குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட காரணமாகி உள்ளது. குறிப்பாக பெரியவர்களிடம் இருந்துதான் குழந்தைகளுக்கு தொற்று கடத்தப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
"தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும். இதற்காக பயனாளர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளும். இதற்காக மாநிலம் தழுவிய அளவில் பிரசார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்," என்று டாக்டர் ஹிசானி ஹுசின் தெரிவித்துள்ளார்.
கிளந்தான் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm