நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோதலில் ஈடுபட்ட நான்கு பெண்கள் உட்பட இருபது பேர் கைது: பெட்டாலிங் ஜெயாவில் பரபரப்பு

கோலாலம்பூர்:

காதலி (தோழி) தொடர்பான பிரச்சினையை முன்வைத்து மோதலில் ஈடுபட்ட இருபது பேரை காவல்துறை தடுத்து வைத்தது. இந்தச் சம்பவம் நேற்று பெட்டாலிங் ஜெயா பகுதியில் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் மொஹம்மத் ஃபக்ருதீன் அப்துல் ஹமித், மேற்குறிப்பிட்ட கலவரத்தில் குறைந்தபட்சம் இருபது பேருக்குத் தொடர்புள்ளது என்றார்.

மேலும், கைதானவர்களில் நான்கு பேர் பெண்கள் என்றார் அவர்.

தடுத்து வைக்கப்பட்ட அனைவரும் 15 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், சம்பவ இடத்தில் இருந்து பேஸ்பால் மட்டை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த மட்டை மோதலில் ஈடுபட்ட ஒருவரால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

"காதலி" தொடர்பான பிரச்சினை காரணமாக அவர்களுக்குள் மோதல் வெடித்து தெரியவந்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டவர்களில் இருவருக்கு ஏற்கெனவே குற்றச்செயல்களில் தொடர்புள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, சுங்கை வே பகுதியில் நிகழ்ந்த மற்றொரு  சம்பவத்தில் 33 வயது மதிக்கத்தக்க ஆடவர் படுகாயம் அடைந்துள்ளார்.

நான்கு பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கியுள்ளது.

முன்விரோதம் காரணமாக அந்த ஆடவருக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள் அந்த ஆடவரை தாக்கியுள்ளனர் என்று ஃபக்ருதின் தெரிவித்தார்.

இதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று பேர் 21 முதல் 37 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் கோலாலம்பூரில் வைத்து கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset