செய்திகள் மலேசியா
ரமலான் சந்தைகளில் சுகாதார விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும்: டத்தோ ஹில்மி ஓத்மான்
கூச்சிங்:
ரமலான் சந்தைகளில் உணவு விற்பனையாளர்கள் சுகாதார விதிகளை கடைப்பிடிக்கிறார்களா என்பதை பொதுமக்களே கண்காணிக்க வேண்டும் என கூச்சிங் வடக்கு மாநகராட்சி மன்றம் (DBKU) வலியுறுத்தியுள்ளது.
கூச்சிங் வடக்கு மாநகராட்சி மன்றத்தின் தலைவர் டத்தோ ஹில்மி ஓத்மான், ரமலான் சந்தையின் செயல்பாடுகளில் சுத்தம் முக்கியமான அம்சம் என்பதால், இதில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்று தெரிவித்தார்.
ரமலான் சந்தைக்கு வரும் மக்கள், சுகாதார விதிகளை மீறும் வியாபாரிகளை உடனடியாக புகாரளிக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் உடல்நலம் தான் DBKU-வின் முக்கிய இலக்கு என்றும் அவர் கூறினார்.
சடோக் ரமலான் சந்தையின் தொடக்க விழாவில், துணை அமைச்சர் டத்தோ இப்ராஹிம் பாக்கி முன்னிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அனைத்து ரமலான் சந்தை பகுதிகளிலும் ‘3R’ குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதால் வியாபாரிகள் கழிவுகளை பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டும் என டத்தோ ஹில்மி தெரிவித்தார்.
இந்த ஆண்டில், மொத்தம் 828 வியாபாரிகள் பல்வேறு முக்கிய இடங்களில் வியாபாரம் செய்ய அனுமதி கிடைத்துள்ளது. இதன் நோக்கம், ரமலான் மாதம் முழுவதும் அனைத்து பகுதிகள் சுத்தமாகவும், சீராகவும் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 20, 2026, 12:10 pm
சண்டாக்கானில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது
February 20, 2026, 12:08 pm
நூற்றுக்கணக்கான வனவிலங்கு உறுப்புகள் பறிமுதல்: வெளிநாட்டவர்களுக்குக் கடும் தண்டனை
February 20, 2026, 12:05 pm
'துங்கு புத்ரா' இடைநிலைப்பள்ளியின் ஆசிரியர் குடியிருப்பில் தீ விபத்து: வீடும் வாகனமும் தீக்கிரையாகின
February 20, 2026, 12:04 pm
ரமலான் முதல் நாளில் உறவுகள் வலுப்படும் இனிய தருணங்கள்
February 20, 2026, 10:43 am
நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு பொறுப்பான அரசியல் மிக அவசியமாகும்
February 20, 2026, 10:42 am
“நாட்டில் வேலைவாய்ப்பு நிலை மேம்பாடு அடைய வாய்ப்புள்ளது”: பொருளாதார ஆய்வாளர்
February 20, 2026, 10:07 am
சபா, சரவாக்கில் இடியுடன் கனமழை பெய்யும்: வானிலைத் துறை எச்சரிக்கை
February 19, 2026, 5:54 pm
மீனவர்களாக நடித்து, இந்தோனேசியாவுக்கு போதைப்பொருள் கடத்திய கும்பல் கைது
February 19, 2026, 5:20 pm
