நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு பொறுப்பான அரசியல் மிக அவசியமாகும்

கோலாலம்பூர்:

அரசியலில் அதிக பரபரப்பான செயல்கள் துணிவுடன் கருதப்படும் நிலை தொடர்கிறது. ஆனால் நாட்டை கட்டியெழுப்புவது பரபரப்புகள் அல்ல; நிலைத்தன்மையே என்பதை மறக்கக் கூடாது என அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஒரே ஆதிக்க அரசியல் காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு பேச்சுவார்த்தை, சமரசத்தின் அடிப்படையில் ஆட்சி அமைந்தது இன்றைய அரசியல் எதார்த்தமாக உள்ளது. இருப்பினும், புதிய அரசியல் சூழலிலும் பழைய சிந்தனைகள் தொடர்வதால், அரசியல் உணர்ச்சிகளைத் தூண்டும் கருவியாக பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால் அரசியல் தலைமைகளுக்கும் அமைப்புகளுக்கும் எதிரான நம்பிக்கையின்மை உருவாகியுள்ளது. குறிப்பாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.

விமர்சனம் மக்களிடையே ஓர் அங்கம் என்றாலும், நிலைத்தன்மையைப் பாதுகாப்பதே இன்றைய முதிர்ந்த ஜனநாயகத்தில் மிக முக்கியமான செயல் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset