செய்திகள் மலேசியா
4 வயது சிறுமிக்கு கொடூர துன்புறுத்தல்: மாற்றான் தந்தை மீது வழக்கு பதிவு
கோலாலம்பூர்:
சமீபத்தில் மாற்றான் தந்தை ஒருவர் தனது மகளைத் துன்புறுத்தியதாகச் சமூக ஊடகங்களில் வைரலான காணொலியை அடுத்து சம்பந்தப்பட்ட ஆடவர் கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
2026 பிப்ரவரி 19ஆம் தேதி Threads சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ பதிவைப் போலீசார் கண்டறிந்ததாகக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர், டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
இரண்டு நிமிடங்கள் நீளமான அந்தக் காணொலியில் ஒரு ஆண் நான்கு வயதான சிறுமியை அடித்து, துன்புறுத்தி, உதைத்து, மீண்டும் மீண்டும் ஓடச் சொல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
“இந்தச் சம்பவம் குறித்து போலீசார் ஏற்கனவே 2025 டிசம்பர் 19ஆம் தேதி பிற்பகல் 1.48 மணிக்கு, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் என கூறப்படும் 27 வயதுடைய மலாய் பெண்ணிடமிருந்து புகார் பெற்றிருந்தனர்.
“அந்தப் பெண் தனது குழந்தையைச் சந்தேகநபர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தும் பல வீடியோக்களைப் பார்த்ததாகத் தெரிவித்தார்,” என்று அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
புகார் பெறப்பட்டதையடுத்து, 2001ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a) கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் தொடர்பான துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து தகவல் இருந்தால், உடனடியாக போலீசில் புகார் அளிக்குமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
“எந்தவொரு தகவலையும் கோலாலம்பூர் போலீஸ் ஹாட்லைன் 03-2115 9999 அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம்,” என்றும் அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 19, 2026, 5:54 pm
மீனவர்களாக நடித்து, இந்தோனேசியாவுக்கு போதைப்பொருள் கடத்திய கும்பல் கைது
February 19, 2026, 3:29 pm
அரசு அதிகாரிகளின் பழுதடைந்த குடியிருப்புகள் சீரமைக்கப்படும்: பிரதமர் அன்வார்
February 19, 2026, 3:03 pm
பெண் வேடத்தில் வீட்டில் திருட முயன்ற ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு
February 19, 2026, 2:18 pm
RM2 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ நாணயங்கள் கொள்ளை: 12 போலீசார் கைது
February 19, 2026, 10:44 am
விதிமுறைகளை மீறினால் அனுமதி இல்லை: வழிபாட்டுத் தலங்கள் குறித்து பிரதமர் அன்வார் எச்சரிக்கை
February 19, 2026, 10:26 am
20 ஆண்டுகளாக நீளும் சிக்கல்: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
February 19, 2026, 10:08 am
கிளானா ஜெயா பாதையில் LRT ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி
February 19, 2026, 10:06 am
பள்ளத்தில் கார் விழுந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உயிர்தப்பியது
February 19, 2026, 10:04 am
