நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சண்டாக்கானில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது

சண்டாக்கான்: 

இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகச் சண்டாக்கானில்  பல முக்கிய சாலைகளும் குடியிருப்பு பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜாலான் பாத்து 7, ஜாலான் மக்காமா, ஜாலான் பாத்து 8, ஜாலான் பாத்து 9, பாது 6 பகுதியில் உள்ள பெட்ரோனாஸ் எரிபொருள் நிலையம் அருகிலுள்ள பகுதி, சபா வனத்துறை அலுவலகம் அருகிலுள்ள சாலை ஆகியவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், தாமன் நூரி, தாமன் ஃபாஜார் லாமா குடியிருப்பு பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை சுமார் 4 மணியளவில் நீர்மட்டம் உயர்ந்ததாகத் தகவல் கிடைத்ததையடுத்து, பொதுப்பணி துறை பாதுகாப்பு அதிகாரிகள் பல இடங்களில் கண்காணிப்பு, அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகச் சண்டாக்கான் மாவட்ட பொதுப்பணி துறை பாதுகாப்பு அதிகாரி சுலைமான் சலாமா தெரிவித்துள்ளார்.

“கம்போங் பங்கேரானில், வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் வெளியே செல்ல முடியாமல் இருந்த ஏழு பேருக்கு நாங்கள் உதவி செய்துள்ளோம்.

வீடுகள் மேலும் பாதிக்கப்படும் பட்சத்தில் மக்களைப் பாதுகாப்பாக இடம்பெயர்க்க தயார் நிலையில் உள்ளோம்,” என்றார் அவர்.

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாகப் பல இடங்களில் மரங்கள் விழுந்த சம்பவங்களும் ஏற்பட்டுள்ளதாகச் சுலைமான் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் எஸ்.டி. மோனிகா தொடக்கப்பள்ளி, சண்டாக்கான் நகர மையம், தாமன் முத்தியாரா, ஜியாட்மாரா பாத்து சாப்பி ஆகியவை அடங்கும்.

பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருந்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப்  பின்பற்றி அசம்பாவிதங்களைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset